Logo

இன்று கையெழுத்திடப்படும் கர்தார்பூர் ஒப்பந்தம்!! 

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலத்தை, வரும் நவம்பர் 9 ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பதால் தெரிவித்திருந்ததை தொடர்ந்து, இன்று இருநாடுகளும் கர்தார்பூர் வழித்தடத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 | 

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர்,  இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் ஓர் வழித்தடமாகும். இந்திய பிரதமர் மோடி, வரும் நவம்பர் 9 ஆம் தேதி இந்த வழித்தடத்தை திறந்து வைக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பதால் தெரிவித்திருந்தார்.

இதனிடையில்,  இருநாடுகளுக்கும் இடையே அதிருப்திகரமான சூழல் நிலவி வருவதை தொடர்ந்து, கர்தார்பூரின் திறப்பு விழா தாமதமடையலாம் என்ற தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இன்று (வியாழன்) இந்த வழித்தடத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில், இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் கையெழுத்திடவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, கர்தார்பூர் வழித்தடத்தை, வரும் நவம்பர் 9 அன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாகவும் மத்திய அமைச்சரகம் கூறியுள்ளது.

பிரதமரின் வருகையை தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நவம்பர் 12 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், ஷிரோமணி குருத்வாரா ப்ரபந்தக்கின் உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP