Logo

ஜி-20 மாநாடு: ட்ரம்ப், புடினை சந்தித்தார் பிரதமர் மோடி!

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்தார்.
 | 

ஜி-20 மாநாடு: ட்ரம்ப், புடினை சந்தித்தார் பிரதமர் மோடி!

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்காக தீவிர பிரசாரத்தால் ஈடுபட்டிருந்த மோடி, ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரிட்டன் பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரை சந்தித்தார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் சவுதி இளவரசர் சல்மானுடன் இருதரப்பு பேச்சுவார்தைகளிலும் பிரதமர் ஈடுபட்டார்.

ட்ரம்ப், புடின் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்ட இந்திய வெளியுறவு துறை செயலாளர் ரவீஷ் குமார் வெளியிட்டார். "ரஷ்யா, இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த ஜி20 தலைவர்களுடன் மோடி பேசுவதை இந்த புகைப்படங்களில் காணலாம்" என கூறி ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிட்டார். 

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. முக்கியமாக, இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவையும் நட்பையும் வளர்ப்பது குறித்து பேசியதோடு, அடுத்த ஆண்டு ஒரு மாநாட்டில் சீன அதிபரை இந்தியாவுக்கு வரும்படியும் அழைத்துள்ளார் மோடி. ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டிரேஸை சந்தித்த மோடி, இந்திய பருவநிலை மாற்றம் குறித்து பொறுப்பாக நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தார்.

சவுதி இளவரசர் சல்மானிடம் இந்திய பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தியாவில் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் தனது முதலீட்டை அதிகரிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP