ஜி20: ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரென்ச் அதிபர் எமானுவேல் மாக்ரோன், ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் உட்பட பலருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
 | 

ஜி20: ஐரோப்பிய தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரென்ச் அதிபர் எமானுவேல் மாக்ரோன், ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் உட்பட பலருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி20 மாநாட்டுக்காக, 2 நாள் பயணமாக அர்ஜென்டினா தலைநகர் புவெனஸ் எய்ரஸுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். முன்னதாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்லையும், பிரென்ச் அதிபர் எமானுவேல் மேக்ரோனையும் பிரதமர் மோடி சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு குறித்தும் பல்வேறு வர்த்தக முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அர்ஜென்டினா அதிபர் மரிசியோ மாக்ரி, ஐரோப்பிய கமிஷனின் தலைவர் ஜான் கிளாட் ஜங்கர், ஐரோப்பிய யூனியனின் அதிபர் டொனால்ட் டஸ்க் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே உள்ள நட்பை வளர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்தார். வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இந்த சந்திப்புகள் குறித்து பேசியபோது, விவசாயம், உணவு, விண்வெளி, பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். 

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஸா, நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட், ஸ்பெயின் நாட்டின் அதிபர் சாஞ்சஸ் காஸ்டிகோன் ஆகியோரையும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சந்தித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP