தென் கொரிய முன்னாள் அதிபருக்கு மேலும் 8 ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹைக்கு மற்றொரு வழக்கில் மேலும் 8 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 | 

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு மேலும் 8 ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஏற்கெனவே சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹைக்கு மற்றொரு வழக்கில் மேலும் 8 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

தென்கொரியாவின் முதல் பெண் அதிபராக பதவி வகித்தவர் பார்க் கியுன் ஹை. இவர் தனது தோழியுடன் சேர்ந்து பதவியை பயண்படுத்தி ஊழலில் ஈடுபட்டு பதவியை இழந்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்பிடம் சட்ட விரோதமாக சுமார் ரூ.19 கோடியே 72 லட்சம் நிதி பெற்று, நாட்டுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதோடு, 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் தேர்வில் முறைத் தவறி நடந்தார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சியோல் மத்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பார்க் கியுன் ஆஜராக மறுத்து விட்டார்.

ஆனால் பார்க் கியுன்வுக்கு எதிராக தேசிய உளவு அமைப்பைச் சேர்ந்த 3 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இந்த நிலையில் விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் அவருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு விதிக்கப்பட்ட 24 ஆண்டு சிறைத்தண்டனையின் தொடர்ச்சியாக அவர் மேலும் 8 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP