கேரளாவிற்கு ரூ. 35 லட்சம் நிவாரண நிதி வழங்கியது மாலத்தீவு

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ள கேரள மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு நிவாரண நிதியாக ரூ.35 லட்சம் வழங்கி உள்ளது மாலத்தீவு அரசு.
 | 

கேரளாவிற்கு ரூ. 35 லட்சம் நிவாரண நிதி வழங்கியது மாலத்தீவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.35 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியது மாலத்தீவு அரசு. 

கேரளாவில் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தில் இருந்து மக்களை மீட்க பல்வேறு தரப்பினர் முன்வந்துள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களில் மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரளாவுக்கு நிவாரணமாக ரூ.35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது மாலத்தீவு அரசு. இதுகுறித்து பேசிய இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமது முகமது, "இந்தியா எங்கள் நெருங்கிய அண்டை நாடாகும். இந்தியாவில் இயற்கை பேரழிவு ஏற்பட்டால் அது மாலத்தீவில் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். தேவையான நேரங்களில் தோழமையோடு எங்களுடன் நின்ற இந்தியாவிற்கு மாலத்தீவின் சிறிய நன்கொடை இது " என கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP