ஃபுட் டெலிவரி செய்யும் ட்ரோன் விமானம் !

ஐஸ்லாந்தில் ட்ரோன் விமானம் மூலம் பர்கர்,பீட்சா போன்ற உணவுப் பொருட்கள் வீடு தேடி டெலிவரி செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சேவை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 வரை வழங்கப்படுகிறது.
 | 

ஃபுட் டெலிவரி செய்யும் ட்ரோன் விமானம் !

ஐஸ்லாந்தில் ட்ரோன் விமானம் மூலம் பர்கர்,பீட்சா போன்ற உணவுப் பொருட்கள் வீடு தேடி டெலிவரி செய்யப்படுகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோட்டா மாநில பல்கலைக்கழகம்  பொறியாளர்கள் இந்த புதிய ட்ரோன் விமானத்தை கண்டுபிடித்துள்ளனர். இதனை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது ஃபலைட்ராக்ஸ் என்ற நிறுவனம். இந்த நிறுவனம் ட்ரோன் விமானம் மூலம் உணவுகளை வாடிக்கையாளர்கள் இடத்திற்கு எடுத்து செல்லும் ஒரு புதிய முயற்சியை செய்துள்ளது.

இந்த புதிய டெலிவரி முயற்சி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்து தரப்படுகிறது. ஆன்லைனில் தன் வீட்டு முகவரியை குறிப்பிட்டு தேவையான உணவுகளையும்  குறிபிட்டால் அவற்றை உடனடியாக அவர்கள் இருக்கும் இடத்திற்கே ட்ரோன் விமானம் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

இந்த விமானத்தில் ஆட்கள் யாரும் இருக்கமாட்டார்கள். குறிப்பாக வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆர்டர் செய்யும் பர்கர், பீட்சா அனைத்தும் அடுத்த சில நிமிடங்களில் அவர்களின் வீடு தேடி வந்துவிடும். இந்த சேவை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 வரை வழங்கப்படுகிறது என ஃபலைட்ராக்ஸ் நிறுவனம் ஆல்லைனில் தகவல் தெரிவித்துள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP