Logo

பின்தொடர்கிறது கூகுள்... உஷார்...!

இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி தேவையான போது மட்டும் இணைய இணைப்பை ஆன் செய்வது தான். இதை கடைபிடித்தால் ரகசியம் ரகசியமாகவே இருக்கும்.
 | 

பின்தொடர்கிறது கூகுள்... உஷார்...!

கணவன் வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு சென்றார். அன்று மாலை மனைவி ஒரு இடத்திற்கு செல்லும் வழியை  கூகுள் மேபில்  தேடினார். நெருக்கமாக இடத்தைதேடிக் கொண்டு இருந்த போது தன் கணவனின் கார் அந்த பகுதியில் நிற்பது தெரிந்தது. வெளியூர் சென்ற கணவனின் கார் 2 தெருக்கள் தள்ளி தான் நிற்கிறதா என்று சந்தேகப்பட்ட அந்த பெண்மணி சம்பந்தப்பட்ட தெருவில் சென்று பார்க்கும் போது கணவனின் கார் நிற்கிறது. அதன் அருகே உள்ள வீட்டின் கதவைத் தட்டிய போது கதவை திறந்தது அந்த பெண்ணின் கணவரும், மற்றொரு பெண்ணும். பின்னர் தான் கணவர் அங்கு குடும்பமே நடத்தி வருகிறார் என்று தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது.

பின்தொடர்கிறது கூகுள்... உஷார்...!

பின்னர் கூகுள் மேப் பூடகமாகத்தான் வழிகாட்ட வேண்டுமே தவிர குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்று குரல்கள் பலமாக ஒலித்ததும், கூகுள் மேப் தன் வழக்கத்தை மாற்றிக் கொண்டது.

இந்தியாவின். பெருநகரங்களில் நடந்து செல்லும் போதோ, வாகனங்களில் செல்லும் போதோ பக்கத்துலதான் காபி டே இருக்கு வந்து ஒரு காபி சாப்பிட்டு போகலாமே என்றோ, நீங்க பல நாட்களாக ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்த புத்தகம் இந்த பகுதியில் உள்ள கடையில் இருக்கு. கடையும் திறந்து தான் இருக்கு போய் வாங்கி கொள்ளலாமே என்று எஸ்எம்எஸ் வந்து அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

பின்தொடர்கிறது கூகுள்... உஷார்...!

இதற்கு எல்லாம் உங்கள் .செல்போன் மூலம் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பது தான் அர்த்தம். நீங்கள் செல்போன் வாங்கி பயன்படுத்தப்படுத்த தொடங்கும் போதே இது போன்றவற்றிக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உரிமை கொடுத்து விடுகிறீரகள். தவிர, இலவசமாக பதிவு இறக்கம் செய்யும் அனைத்து செயலிகளுக்கும் இது தான் முக்கிய வேலையே.

இந்த தொல்லைகளை நீங்கள் ஒப்புக்கொண்டால் தான் செல்போன், அல்லது சம்பந்தப்பட்ட செயலி இயங்கும். இதன் உச்ச கட்ட பாதிப்பு நீங்கள் எந்த கட்சியை சார்ந்தவர், எந்த கட்சிக்கு நீங்கள் ஓட்டு போடுவீர்கள், உங்கள் செக்ஸ் ஆர்வம் எப்படி என்பதையெல்லாம் அறிந்து அதற்கு ஏற்ப கவனிப்புகள் இருக்கும் என்பதுதான்.

இது போன்ற பாதிப்பால் பெரும் அவதி அடைந்த ஐரோப்பிய யூனியன் நுகர்வோர் குழுகள்  அந்நாட்டின் ஒழுங்குமுறை ஆணையத்திடம் குகூள் மீது புகார் கொடுத்துள்ளது. இதற்கு நார்வே நுகர்வோர். சமீபத்தில் நடத்திய ஆய்வை சான்றாக காட்டி இருக்கிறார்கள். இது போன்றே. செக் குடியரசு, கிரேக்கம், நெதர்லாந்து, நார்வே , போலந்து , ஸ்வோவேனியா, ஸ்டீவிடன் போன்ற நாடுகளிலும் தாக்கல் செய்யப்பட்டுதுள்ளது .

பின்தொடர்கிறது கூகுள்... உஷார்...!

செல்போன் பயனீட்டாளர்களின் நகர்வு பதிவுகள், கூகுள் இணைய முகவரி மூலம் நுழைந்த செயலிகள் ஆகியற்றின் மூலம் இந்த உளவு வேலையை பார்ப்பதாக நுகர்வோர் அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.  அது செபல்போன் பயன்படுத்துவோரின் சுய விபரங்கள், நம்பிக்கைகள், பாலியல் விருப்பங்கள் மத நம்பிக்கைகள் ஆகியவற்றை திருடுவதன் மூலம் சம்பந்தப்பட்டவரை  புளுவேல் விளையாட்டு போல கட்டுப்படுத்த முடியும். இந்த நடைமுறைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் கூறி உள்ளன.

இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி தேவையான போது மட்டும் இணைய இணைப்பை ஆன் செய்வது தான். இதை கடைபிடித்தால் ரகசியம் ரகசியமாகவே இருக்கும்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP