Logo

அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் தேடப்படும் குற்றவாளி யார் ??

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் அச்சுறுத்துல்களுக்கு காரணமான தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை பல நாடுகளும், சம்பந்தபட்ட நிறுவனங்களும் தற்போது வெளியிட்டுள்ளது.
 | 

அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் தேடப்படும் குற்றவாளி யா

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதியின் இறப்பை தொடர்ந்து, உலகின் அச்சுறுத்துல்களுக்கு காரணமான தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை பல நாடுகளும், சம்பந்தபட்ட நிறுவனங்களும் தற்போது வெளியிட்டுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியம், யுஎஸ்-ன் ஃபெடரல் ப்யூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை போன்ற சர்வதேச அமைப்புகள் "முக்கிய குற்றவாளிகள் 2018" என்ற பட்டியலை கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ படையினரால் சிரியாவின் பரிஷா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான அபு பக்கர் அல் பக்தாதி, உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான முக்கிய பயங்கரவாத குற்றவாளிகளின் பட்டியலை பல நாடுகளும் தற்போது வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியலின் படி, முன்னாள் எகிப்தியன் இஸ்லாமிய ஜிகாத் தலைவனும், தற்போதைய அல் கொய்தா அமைப்பின் தலைவனுமான அய்மான் அல் சவாரி, ஜமாத் உத் தவா இஸ்லாமிய அமைப்பின் தலைவனான ஹஃபீஸ் சயீத், ஹக்கானி நெட்வர்க் அமைப்பின் தலைவனான சிராஜூதின் ஹக்கானி, அல்-கொய்தா அமைப்பின் மூத்த தலைவனான அப்துல்லா அஹமது அப்துல்லா, அல்-கொய்தா ராணுவ அமைப்பின் தலைவனான சயிஃப் அல் அதல் ஆகியோர் சர்வதேச நாடுகளின் முக்கிய தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதை தொடர்ந்து, இந்திய புலனாய்வு முகமை பட்டியலின் படி, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 15 பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாவோயிஸ்ட் தலைவனான முப்பல்லா லக்ஷ்மன் ராவ் மற்றும் சிபிஐ மாவோயிஸ்டான நம்பாலா கேஷவ் ராவ் ஆகியோரின் பெயர்களும் புலனாய்வு முகமை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP