ஹொடி மோடி நிகழ்ச்சியை புகழந்துள்ள அயல்நாட்டு பத்திரிகைகள்!!!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி மாபெரும் நிகழ்ச்சியாக அமைந்தது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் பிரதான விருந்தினராகக் கலந்துகொண்டார். இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் புகழ்ந்து கருத்துகளை வெளியிட்டுள்ளன.
 | 

ஹொடி மோடி நிகழ்ச்சியை புகழந்துள்ள அயல்நாட்டு பத்திரிகைகள்!!!

அமெரிக்க இந்திய வம்சாவழியினர் நடத்திய,  "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மோடி இருவரும், தங்கள் இருவரையும் "விசுவாசமான நண்பர்கள்" என்று குறிப்பிட்டனர்.

எப்படி இருக்கிறீர்கள் மோடி, நாம் பகிர்ந்துகொண்ட கனவுகள், நம் பிரகாசமான எதிர்காலம்"  என்று பெயரிடப்பட்டுள்ள, அமெரிக்க இந்திய வம்சாவழியினர் நடத்தும்,  "ஹௌடி மோடி" நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் மற்றும் மோடி இருவரின் பேச்சும், இந்தியா மீது ட்ரம்ப் - ம், அமெரிக்கா மீது மோடியும் வைத்துள்ள மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் :

தி நியூயார்க் டைம்ஸ் 

"இரு தலைவர்களும் தங்கள் திறமை மற்றும் தலைமைத்துவத்துடன் அயராது போராடி இந்நிலையை எட்டியவர்கள். இவ்விருவர் மீது கொண்ட மிகுந்த நம்பிக்கையின் காரணமாகவே மக்கள் இவர்களை தேர்வு செய்துள்ளனர்".

லண்டனைச் சேர்ந்த தி கார்டியன் :

"ஹௌடி மோடி" நிகழ்வில் இரு மாபெரும் ஜனநாயக நாடுகளின் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றியது வரலாற்று சிறப்பு நிறைந்த நிகழ்வு. ட்ரம்ப் - ன் கொள்கைகள் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் வளர்ந்து வரும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவரான நரேந்திர மோடியின் ஆற்றலும், கொள்கைகளும், சிந்தனைகளும் அனைத்து நாடுகளையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது".

பிபிசி இந்தியா :

"இந்த நிகழ்வானது இரு தலைவர்களுக்கும் வெற்றி பாதையை  தேடி தந்துள்ள நிகழ்வாகும். 

சீனா :

"அமெரிக்காவின் எரிபொருள் வர்த்தகத்தின் தலை நகரமென கருதப்படும் ஹூஸ்டன் நகரில் உள்ள, என்.ஆர்.ஜி அரங்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க இந்திய வம்சாவழியினர் நடத்திய "ஹௌடி மோடி" நிக்ழ்வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ம் கலந்துக் கொண்டார். இது இரு நாடுகளுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.

ஏபிசி ஆஸ்திரேலியா : 

காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கவும், ட்ரம்ப் மோடியின் நட்புறவை பறைசாற்றும் வகையிலும் இந்நிகழ்வு அமைந்திருந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP