பெண் பணியாளருக்கு ஊட்டி விட்ட எகிப்து வாலிபர் கைது

சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரியும் சக பெண் பணியாளருடன் அமர்ந்து சாப்பிட்டு, அவருக்கு உணவை ஊட்டி விட்டதால் எகிப்து இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 | 

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கவும் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் பெண்கள் மீது விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள் சவுதியில் இன்னும் அமலில் இருக்கிறது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரியும் சக பெண் பணியாளருடன் அமர்ந்து சாப்பிட்டு, அவருக்கு உணவை ஊட்டி விட்டதால் எகிப்து இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண்ணுக்கு ஒரு ஆண் உணவு ஊட்டப்பட்டது குறித்த வீடியோ சமூக வலைத்தளம் மூலம் வைரலாக பரவியதை பார்த்து போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP