பறந்து கொண்டே சேவை செய்யும் துபாய் காவல்துறையினர்

நவீன முறையில் துபாய் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள பயிற்சி. நவீன முறையில் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ளவும், விபத்து காலங்களில் முதலுதவி செய்ய விரைந்து செல்லவும் ஹோவர் பைக் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
 | 

பறந்து கொண்டே சேவை செய்யும் துபாய் காவல்துறையினர்

தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கி வரும் துபாய், தற்போது நவீன முறையில் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள பயிற்சியளித்து வருகிறது.

மிக குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள துபாய், சுற்றுலா நகரங்கள் வரிசையில் முதன்மை வகிப்பதோடு, அதீத தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. அதன் ஒரு பகுதியாக, துபாய் போலீசாருக்கு பறக்கும் மோட்டார் சைக்கிள் (ஹோவர் பைக்) கொடுக்கப்படவுள்ளது. இந்த பைக் மூலம் வானத்தில் பறந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். முக்கியமாக, ஏதேனும் விபத்து என்றால், அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் ஆளில்லாமலும் இதனை இயக்க முடியும். இதனை இயக்குவதற்கான பயிற்சிகள் துபாய் போலீசாருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. வரும் 2020ஆம் ஆண்டில் இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு வரவுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP