இந்தியாவிலும் போதைப் பொருள் உற்பத்தி: குற்றம்சாட்டும் ட்ரம்ப்

போதை பொருள் தடுப்பு குறித்த கூட்டம் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்றது. அப்போது சர்வதேச அளவில் போதைப் பொருள் உற்பத்தி, போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுப்பதை சுட்டிக் காட்டினார்.
 | 

இந்தியாவிலும் போதைப் பொருள் உற்பத்தி: குற்றம்சாட்டும் ட்ரம்ப்

சட்டவிரோதமாக போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டியுள்ளார்.

போதை பொருள் தடுப்பு குறித்த கூட்டம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடைபெற்றது. அப்போது சர்வதேச அளவில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் போதை பொருட்கள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுத்து வருவதை சுட்டிக் காட்டினார். 

அதே நேரம், உற்பத்தியாகும் நாடுகளின் முயற்சியில்லாமல் இதில் பயனடைவது சாதாரான காரியமில்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், "சட்டவிரோதமாக போதைப் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை பிற நாடுகளுக்கு கடத்தும் 21 நாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று. போதை பொருட்கள் கடத்தும் ஆசிய நாடுகளில்  பாகிஸ்தான், மியான்மர், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் முக்கிய நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பகாமஸ், பெலிஸ், போல்வியா, கொலம்பியா, கோஸ்டா ரைகா, ஈக்வேடார், எல் சால்வேடார், கவுட்டமாலா, ஹைதி, ஹோண்டுரஸ், ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, பனாமா, பெரு, நிகராகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளும் போதை பொருட்களை சட்டவிரோதமாக கடத்து நாடுகளின் பட்டியலில் இடப்பெற்றுள்ளன. புவியியல் சூழல், பொருளாதார நிலை மற்றும் வர்த்தக முறைகளால் இது போன்ற சட்டவிரோத உற்பத்தியும் கடத்தல் பொருட்கள் ஏற்றுமதியும் ஓங்கி இருக்கிறது. மெக்சிகோவிலிருந்து வரும் ஹெராயின் மற்றும் கொலம்பியாவிலிருந்து வரும் கோகைன் மூலம் அமெரிக்காவில் ஆண்டுத்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலியாவது கவலையடைய வைக்கிறது.  

கொலம்பியா, மெக்சிகோ, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் உற்பத்தி அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது''  என்றார்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP