வரிக்குதிரைகளாக மாற்றப்பட்ட கழுதைகள் : சாயம் வெளுத்ததால் பரபரப்பு!

விசாரணையில் அவை வரிக்குதிரைகள் அல்ல கழுதைகள் என்பதும். வரிக்குதிரைகள் போல வண்ணம் தீட்டப்பட்டு ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே இது போன்ற சம்பவம் எகிப்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
 | 

வரிக்குதிரைகளாக மாற்றப்பட்ட கழுதைகள் : சாயம் வெளுத்ததால் பரபரப்பு!

ஸ்பானிஷ்  பீச் டவுனில் சில தினங்களுக்கு முனஅ ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ,குதிரைக்கு பதிலாக வரிக்குதிரைகளை கொண்டு சஃபாரி நடைபெற்றுள்ளது. இதனால் திருமண வீட்டார் குறித்து அந்த பகுதியில் மிக பெருமையாக பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு வரி குதிரைகள் இரண்டும் ஒரு பட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதனை கண்ட சுற்றலா பயணிகள் அந்த வரிக்குதிரைகளை புகைப்படம் எடுத்துள்ளனர்.

அப்போது வரிக்குதிரையின் கோடுகள் அழிந்திருப்பதை கண்டு அதிர்சசியடைந்த சுற்றுலா பயணிகள், இதுகுறித்து விலங்குகள் உரிமை ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் விசாரணையில் அவை வரிக்குதிரைகள் அல்ல கழுதைகள் என்பதும், வரிக்குதிரைகள் போல வண்ணம் தீட்டப்பட்டு ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் எகிப்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP