பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா??

அயர்லாந்து மற்றும் ஜெர்மனியின் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டுள்ள பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா 102 இடம் பெற்றுள்ளது.
 | 

அயர்லாந்தின் கன்சர்ன் வர்ல்ட் வைட் நிறுவனமும் ஜெர்மனியின் வெல்த்ஹங்கர் லெப் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில், 117 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியா 102 இடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான  பாகிஸ்தான் 94வது இடமும், வங்கதேசம் 88வது இடமும், நோபாளம் 73வது இடமும் பிடித்து இந்தியாவை விட முன்னிலை வகிக்கின்றது.

அவற்றில் பெலாரஸ், பல்கேரியா, சிலி, கியூபா, துருக்கி ஆகிய நாடுகள் 5க்கும் குறைவான மதிப்பெண்களுடன் பட்டினியில்லா நாடுகள் மற்றும் சிறந்த வளரும் நாடுகள் என பெருமையைப் பெற்றுள்ளன.

இந்தியாவின் மக்கள்தொகை தான் தற்போதைய பட்டியலில் இந்தியா பின்தள்ளப்பட காரணம் என  பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் 55 வது இடத்திலிருந்து 102வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP