இம்ரானிடம் சாட்டையை சொடுக்கிய இவர் யார் தெரியுமா ?

ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு தக்க பதிலடி தரும் வகையில் பதிலளித்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதல் செயலாளர் விதிஷா மைத்ரா.
 | 

இம்ரானிடம் சாட்டையை சொடுக்கிய இவர் யார் தெரியுமா ?

ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு தக்க பதிலடி தரும் வகையில் பதிலளித்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதல் செயலாளர் விதிஷா மைத்ரா.

ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில் இந்தியாவின் பிரதிபலிப்பாக உரையாற்றிய அவர், இம்ரான் கான் - ஐ அவரின் முழு பெயர் கூறி "இம்ரான் கான் நாய்ஸி" என்றே குறிப்பிட்டார்.

"பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கான்  நாய்ஸி கூறுகையில், அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே வழக்குகளும், சச்சரவுகளும் தொடர்ந்து நடக்கும் நிலையில், அணு ஆயுத போருக்கே அது வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார். இவரின் இந்த பேச்சு அமைதியை விரும்பும் ஒரு தலைவரின் பேச்சாக எனக்கு தெரியவில்லை.

மேலும், "பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு இடமளிக்காது என்று கூறும் பிரதமர் இம்ரான் கான், ஐக்கிய நாடுகளால், பயங்கரவாதிகள் என்று குறிப்பிடபட்டுள்ள 130 நபர்களுக்கும் பாகிஸ்தான் தான் வீடு என்பதை மறுக்க இயலுமா ? பயங்கரவாதிகளாக முத்திரைக் குத்தப்பட்ட அல்-கொய்தா அமைப்பிற்கு ஓய்வூதியம் அளிக்கும் ஒரே நாடு பாகிஸ்தானாக தான் இருக்கும்" எனக் கூறினார்.

இந்தியாவை நேரடியாக தாக்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்கு தக்க பதிலடி தரும் ரீதியில் அவரது பேச்சு இருந்ததாக அனைவரும் அவரை பாராட்டினர்.

இந்தியாவின் தரப்பிலிருந்து இவ்வளவு திறமையாக பேசிய விதிஷா மைத்ரா யார் தெரியுமா ?

2008 ஆம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய வெளிநாட்டு சேவை துறையை தேர்ந்தெடுத்த விதிஷா, 2009 ஆம் ஆண்டின் சிறந்த பயிற்சியாளருக்கான பீமால் சன்யால் நினைவு பரிசு பெற்றவர். தற்போது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதல் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் விதிஷா, கொள்கை, திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி பிரிவின் துணை செயலாளருமாவார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP