உங்களுக்குத் தெரியுமா...? இன்று உலக கவிதை தினம்....!

உலம் முழுவதும் 1999ஆம் ஆண்டு முதல் மார்ச் 21ஆம் தேதி உலக கவிதை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை லக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவித்ததன்படி அனுசரிக்கப்படுகிறது.
 | 

உங்களுக்குத் தெரியுமா...?  இன்று உலக கவிதை தினம்....!

உலகம் முழுவதும் 1999ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு மார்ச் 21ஆம் தேதியும், உலக கவிதை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவித்ததன்படி அனுசரிக்கப்படுகிறது. 

இலக்கிய அமைப்புகள் மற்றும் கவிஞர்களின் திறனையும் செயல்பாட்டையும் ஊக்கப்படுத்தும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் விதத்திலும் உலக கவிதை தினத்தைக் கொண்டாட நடத்த யுனெஸ்கோ கேட்டுக்கொண்டது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தபோதிலும், சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி மார்ச் 21-ஐ கவிதை தினமாக கடைபிடித்து வருகின்றன.  சர்வதேச கவிதை அமைப்புகளுக்கு புதிய அங்கீகாரம் மற்றும் கவிதைகளைப் படித்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டது உலக கவிதை தினம். 

கவிதை என்றதும், உடன் நினைவுக்கு வருவது காதல் தான். கவிதை எழுதத் தெரியாதவர் கூட காதலித்து விட்டால் கவிஞர் ஆகி விடுவர். சிந்திக்க தொடங்கிவிடுவர், அந்த ஒருவரை மட்டும். ஆனால் கவிதை காதலர்களுக்கு மட்டும் அல்ல. 

நாட்டிற்காக கவிதை எழுதினார் பாரதியார். புரட்சிக்காக கவிதை எழுதினார் பாரதிதாசன். இப்படி நம் கவிஞர்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இறைவனுக்காக, தந்தைக்காக, தாய்க்காக. இப்படி எவருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் கவிதை. 

பொய்யை மையமாக வைத்து புகழ்ந்தும் கவிதைகள் எழுதப்படுகிறது. “கவிதைக்குப் பொய் அழகு“ என்று சொல்வார்கள், கவிதைக்கு பொய் அழகு தான், ஆனால்  உண்மையை கவிதையாக்கிப் பாருங்கள். அதை விட அழகு வேறு எதுவும் இல்லை என்பதே உண்மை. 

அனைவருக்கும் நியூஸ் டிஎம்-இன் உலக கவிதை தின வாழ்த்துக்கள் !
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP