தீவில் ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் விநியோகம்

போக்குவரத்து வசதியின்றி மருந்துகளை விநியோகம் செய்ய முடியாமல் இருந்து வந்த வனுவாட்டு தீவில் தற்போது ஆளில்லா விமானம் மூலம் குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 | 

தீவில் ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகள் விநியோகம்

வனுவாட்டு தீவில் ஆளில்லா விமானம் மூலம் குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 

பசுபிக் தீவு நாடான வனுவாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்துகள் கிடைப்பதில் தட்டுபாடு நிலவி வருகிறது. இதனால் அந்த குழந்தைகள் சிறு வயது முதலே பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிரமப்பட்டு வளர்கின்றனர். இதனை தடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு பல முயற்சிகளை ஐ.நா சபையின் யுனிசெப் என்ற அமைப்பு மேற்கொண்டு வந்தது. 

இந்நிலையில், தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி ஆளில்லா விமானம் மூலம் தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது யுனிசெப். சிறிய அளவிலான பெட்டியில் ஐஸ் கட்டிகள் வைத்து அதன் மத்தியில் மருந்துகள் வைக்கப்பட்டு அதனை ஆளில்லா விமானத்தில் பொருத்தி அனுப்பி வைத்துள்ளனர். இது போன்று போக்குவரத்து வசதியின்றி மருந்துகள் கிடைக்காமல் சிரமப்படும்  மக்களுக்கு இந்த ஆளில்லா விமானம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என யுனிசெப் தெரிவித்துள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP