இந்திய பிரதமருடனான உரையாடல் எங்களது நட்புறவை பலப்படுத்தியுள்ளது - ஜின்பிங்

வுஹான் மாநாடு இருநாடுகளின் நட்புறவுக்கு வழிவகுத்த நிலையில், இப்போதைய இரு தலைவர்களின் சந்திப்பு இருவரின் நட்புறவை வலுப்படுத்தியுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
 | 

"கடந்த வருடம் நடைபெற்ற வுஹான் மாநாடே இந்தியா சீனாவின் தற்போதைய நட்புறவிற்கு காரணம். இந்திய பிரதமருடன் மேற்கொள்ளும் அனைத்து உரையாடல்களுமே தகவல்கள் நிறைந்தவைகளாகவே இருக்கின்றன.தற்போதைய எங்களது சந்திப்பு, எங்கள் இருவரின் நட்புறவை வலுவாக்கியதோடு மட்டுமில்லாமல், இருநாடுகளின் வர்த்தக உறவையும் பல மடங்கு மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.

பொருளாதாரம், வர்த்தகம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் குறித்த அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாங்கள் விரிவாக கலந்துரையாடினோம்" என்று மிகவும் மகிழ்வுடன் கூறியுள்ளார் சீன அதிபர் ஜீ ஜின்பிங்.
 
Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP