தாவூத் கூட்டாளி பாகிஸ்தானில் கொலை

குஜராத் முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய, பரூக் தேவ்திவாலா, பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

தாவூத் கூட்டாளி பாகிஸ்தானில் கொலை

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் உட்பட, நம் நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத சம்பவம் குறித்த வழக்கில், முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமை, மத்திய அரசு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 

தாவூதுக்கு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அந்நாட்டு அரசு ஆதரவளிப்பதால், தொடர்ந்து தலைமறைாகவே உள்ளான். 

இந்நிலையில், குஜராத் முன்னாள் அமைச்சர் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய, பரூக் தேவ்திவாலா, பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நம் நாட்டை சேர்ந்த பரூக், பல்வேறு குற்றச்சம்பவங்ளில் ஈடுபட்டதோடு, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டான்.

தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளில் ஒருவனாக செயல்பட்ட பரூக், போலி பாஸ்போர்ட் வழக்கில், கடந்த ஆண்டு துபாயின் கைது செய்யப்பட்டான். 

இவனை நாடு கடத்தும் முயற்சியில், இந்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. அதே சமயம், பரூக், பாகிஸ்தானை சேர்ந்தவன் எனக் கூறிய பாக்.,  அரசு, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையடுத்து, பரூக், பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டான். பரூக்கின் அடையாள ஆவணங்களை, சர்வதேச நீதிமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், தாவூத் இப்ராகிம் பற்றிய தகவல்களை கூறி, அவனுக்கு எதிராக, இந்திய அதிகாரிகளிடம் பரூக் சாட்சியம் அளிக்க உள்ளதாக, தாவூத் கூட்டத்திற்கு தகவல் கசிந்தது. 

இதையடுத்து, பரூக், பாகிஸ்தானில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்திய அதிகாரிகள், இது குறித்து, அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP