பருவநிலை மாற்றத்தை மிக பெரிய பேரிடராக கருத வேண்டும்: ஐநா தலைவர் வலியுறுத்தல்

பருவநிலை மாற்றம் மிகப்பெரிய ஆபத்து என்றும், சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டிரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
 | 

சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து திடமான அரசியல் முடிவுகளை எடுத்து, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என குட்டிரெஸ் தெரிவித்துள்ளார். மேலும், பருவநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஆப்பிரிக்காவுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்துக்கான பந்தயத்தில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம். ஆப்பிரிக்காவுக்கும், உலகத்துக்கும் இது மிகப்பெரிய பேரிடராக அமையும். முக்கியமாக இதனால், ஆப்பிரிக்கா அதிகமாக பாதிக்கப்படும். மற்ற கண்டங்களை ஒப்பிடும் போது, புவி வெப்பமயமாதலுக்கு ஆப்பிரிக்காவின் நடவடிக்கைகள் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும், ஆப்பிரிக்க நாடுகள் அதன் விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படைகின்றன" என தெரிவித்துள்ளார்.

மேலும், "சர்வதேச அளவில் பருவநிலை மாற்றத்தை ஒரு மிகப்பெரிய பேரிடராக கருதி, அதைப் போக்குவதற்காக போதிய அரசியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், பருவநிலை மாற்றம் என்பது ஒரு பொய் என்றும், விஞ்ஞானிகள் பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும், கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP