Logo

அந்தரத்தில் தொங்கியபடி குடியுரிமை பெற்ற இளைஞர்கள்

கனடாவின் குடியுரிமை பெற்ற 6 பேர் உயரமான கோபுரத்தில் இருந்து தொங்கியபடி உறுதிமொழி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

அந்தரத்தில் தொங்கியபடி குடியுரிமை பெற்ற இளைஞர்கள்

கனடாவின் குடியுரிமை பெற்ற 6 பேர் உயரமான கோபுரத்தில் இருந்து தொங்கியபடி உறுதிமொழி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கனடாவில் குடியுரிமை வாரக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்நாட்டில் குடியுரிமை பெறவிரும்பிய் 6 பேரை டொரன்டோவில் உள்ள சி.என். டவர்  கட்டடத்தின் 116 ஆவது மாடிக்கு அழைத்து சென்று பாதுகாப்பு உபரகரணங்களுடன் கட்டிடத்தின் உச்சியில் கட்டி தொங்கவிடப்பட்டனர்.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், அங்கு உயரத்தில் கயிற்றில் தொங்கியபடி இருந்த 6 பேருக்கு கனட நாட்டின் குடியுரிமையை வழங்கினர். 550 மீட்டர் உயரத்தில் தொங்கியபடி வலது கரங்களை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழியை இளைஞர்கள் படித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குடியுரிமை பெற்றவர்கள் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்களாவர். கனடிய குடியுரிமையைப் பெற்றவர்களுக்கு வானமே எல்லையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கவேண்டும் என்ற முனைப்பில் இத்தகைய சடங்குகள் நடப்பதாக அந்நாட்டு அமைச்சர் அகமது ஹுசைன் தெரிவித்துள்ளார்.

Newstm.in 
 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP