Logo

சீன அதிபருக்கு இந்தியாவின் கலைநயத்தை பரைசாற்றும் விதமான பரிசு

இந்திய பயணம் மேற்கொண்டிருந்த சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, இந்திய கலைநயத்தை பரைசாற்றும் விதமாக, கையினால் நெய்யப்பட்ட, ஜின்பிங்கின் முகம் பொருந்திய மல்பெரி பட்டுத்துணியை பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.
 | 

இரண்டாம் நூற்றாண்டுகளில் பல்லவர்களிள் முக்கிய துறைமுக நகரமாக திகழ்ந்த மாமல்லபுரத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சீன அதிபரை வரவேற்கும் விதமாக பிரமாண்டமான தோரணங்களும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, இந்தியாவின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விளக்கும் வகையில் அமைய பெற்றிருக்கும், நாச்சியார்கோவில் விளக்கையும், தஞ்சாவூர் ஓவியத்தையும் பரிசாக வழங்கினார்.

சீன அதிபருக்கு இந்தியாவின் கலைநயத்தை பரைசாற்றும் விதமான பரிசு

இதை தொடர்ந்து, அவரது பயணத்தின் இறுதி நாளான இன்று, இந்திய கலைநயத்தை பரைசாற்றும் விதமாகவும், இந்தியர்களின் பழம்பெரும் தொழிலான நெசவு தொழிலை நினைவுகூறும் விதமாகவும், கை கொண்டு தயாரிக்கப்பட்ட, சீன அதிபரின் முகம் பொருந்திய மல்பெரி பட்டுத்துணியை பரிசாக அளித்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

இந்த பரிசு, சீன அதிபருக்காக, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த, ராமலிங்க சௌடாம்பிகை நெசாவாளர் அமைப்பின், மிக திறமை வாய்ந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP