சீனா அண்ணாச்சியும், பெரியப்பா மன்மோகனும்!

மன்மோகன் பெரியப்பாவுக்குப் பிறகு இந்திய நிர்வாகத்திற்கு வந்த மோடி பாபா, ஆரம்பத்திலிருந்தே அண்ணாச்சியை ச்சீ…. போ என்று உதாசீனப்படுத்தியும் அண்ணாச்சி எப்பவாவது உறுமினாரென்றால் ஒதுங்கிப் போகாமல் திரும்பி எதிரில் நின்று பிச்சுப்புடுவேன் பிச்சு என்பது போல முறைத்தும் வந்ததால், சீனா அண்ணாச்சி கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.
 | 

சீனா அண்ணாச்சியும், பெரியப்பா மன்மோகனும்!

உலகில் இரண்டாவது பெரிய சக்தி வாய்ந்த நாடு சீனா. அவர்களுடன் மோதுவது இந்தியாவுக்கு ஆபத்து. ஏற்கனவே மோதிப் பார்த்ததன் விளைவு என்னவென்று தெரியுமல்லவா? ஆசியாவில், குறிப்பாக தெற்காசியாவில் யார் என்ன செய்யணும்? எந்த நாட்டின் எல்லை எதுவரை? என்பது வரை சீனாக்கார அண்ணாச்சி தான் முடிவு பண்ணுவார். மீறினால் அந்த நாட்டிற்குள் உள்நாட்டுக் கிளர்ச்சியைக் கிளப்பி விட்டுடுவார்.

திபெத்தில் தலாய்லாமா என்ற பிள்ளையார் கோவில் பூசாரியை அடிச்சு விரட்டிட்டு, திபெத் என்னுடயது தான் என்று சவடால் விட்டதன் பின்பு தான், சீனாக்கார அண்ணாச்சிக்கு கூடுதலா தைரியம் வந்துச்சு. உடனே சுத்து வட்டாரத்திலிருந்த பதினெட்டு தீவுகளுக்கும், தன் ஆளுமையைப் பரப்பினார்.

அதுவும் கத்தியின்றி ரத்தமின்றி வாய்ச்சவுடாலிலேயே எல்லாத்தையும் வளைச்சுப் போட்டுட்டார். இருந்தாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களான வியட்னாம், பிலிபைன்ஸ், லாவோஸ், இந்தோனேசியாவின் சில தீவுகள் என எல்லாவற்றையும் அபகரிக்கும் நோக்குடன், அப்பப்ப ஏதாவது சொல்லி உருட்டி மிரட்டிட்டே இருப்பார்.

இருந்தாலும் அவரை விட எட்டுக் குத்துக்கு இளையவனான அவரோட சித்தப்பா மகன் தைவான், ஒரு தடவை வாய்ய்யா பார்த்துடலாம்னு  எதிர்த்து சண்டைக்கு வந்து நின்னுட்டான். எவ்வளவு பெரிய ஆளு? எவ்வளவு பலம் பொருந்திய நாடு? இத்துனூண்டு பய வந்து எகிறிட்டானேன்னு, அண்ணாச்சிக்கு தொடை நடுங்கிடுச்சு.

இருந்தாலும் வெளியே காட்டிக்காம, சின்னப்பயனு பார்க்கிறேன் இல்லாட்டி சிதைச்சுடுவேன்னு சவுண்டு மட்டும் விட்டுட்டு தைவான் பக்கம் திரும்புறதை நிறுத்திக் கொண்டார் சீனாக்கார அண்ணாச்சி.

அந்தப் பக்கம் அப்படின்னா, இந்தப்பக்கம் இந்தியாவுடன் ஒரண்டை இழுத்துட்டே இருப்பார். அதாவது, தெருவுக்குள் புதிதாக வரும் ஆட்களைப் பார்த்து, நாய் ஒரு எச்சரிக்கையுணர்வுடன் உருமுமே அப்படி. அந்த உருமலுக்கே, இங்கே இருந்த சில பிரதமர்கள் உள்ளே நடுங்கிட்டே, பெரிய அண்ணாச்சி அமெரிக்காகிட்டேயோ இல்லை நாட்டாம ஐநா சபைகிட்டேயோ போய் புலம்பிட்டு இருப்பாங்க.

சீனா அண்ணாச்சியும், பெரியப்பா மன்மோகனும்!

சீனாக்கார அண்ணாச்சி, சைஸா பாக்கி பாய்கிட்ட போய், பாய் பாய் உன்னை இந்தியாக்காரன் ஒரு நாளில்லை ஒரு நாள் தூக்கிப் போட்டு மிதிக்கத் தான் போறான். உன் ஏரியாவில் நான் கடை போட்டு இருந்துக்கிட்டேன்னா, நாளைக்கு அவன் உன்னைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் போது, ஓடி வந்து விலக்கி விட வசதியா இருக்கும்னு அவன் கூட கை கோர்த்துக்கிட்டு, நைஸா அவனைச் சுரண்ட ஆரம்பிச்சுட்டார்.

அவனும் அண்ணாச்சி சொல்றதுக்கெல்லாம் காசையும் சில்லறை ஆயுதங்களையும் வாங்கிகிட்டு வழக்கம் போல ரவுடித்தனம் பண்ணிட்டு திரிஞ்சான். 

அந்த நேரத்தில் தான் சீனாக்கார அண்ணாச்சி, BRI (BELT and ROAD INICIATIVE) என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினார். அதாவது, அவரது நோக்கம் தரை வழி மற்றும் கடல்வழி போக்குவரத்தினை உருவாக்குவதாகக் காட்டிக் கொண்டு, சீன சாம்ராஜ்யத்தை ஆசியா முழுவதும் விரிவுபடுத்துவதே.

இது அண்ணாச்சி வீட்டைச் சுத்தி இருக்கும் இந்தியா பாக்., பங்களா முதல் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் வரை எல்லா வீட்டிற்கு அண்ணாச்சியின் மனக்கிடக்கை தெரிந்தும் எதிர்த்துப் பேச முடியாமல் நோபல் காஸ் (Noble cause) என்ற போர்வையில் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டனர்.

ரோடு போடும் விசயத்தில் இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் பார்த்துக்கிட்டார் சீனா அண்ணாச்சி. ஆனால், கடல் வழித் தடத்தில் இந்தியாவைத் தவிர்க்க முடியவில்லை. அண்ணாச்சி  அடிக்கடி இந்தியாவுக்கும் ப்ரொபோசல் கொடுத்துட்டே இருந்தார். 

என்னமோ தெரியல ஆரம்பத்தில் இருந்தே இந்தியா, சீனாக்காரருக்குப் பிடி கொடுக்கவே இல்லை. காரணத்தில் ஒன்று, அண்ணாச்சி போடும் ரோடு, பாகிஸ்தான் பிடியில் இருக்கும் நம்ம ஜம்மு - காஷ்மீர் வழியாக போகும் அவரின் ரோடு. இதுக்கு அண்ணாச்சி கொடுத்த விளக்கம் அது பாகிஸ்தானுடையது. நான் பாகிஸ்தான் இடம் அனுமதி வாங்கிட்டேன் என்று சவடால் விட்டதோடு, ஆசிய வரைபடத்தில் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு சொந்தமானது போல ஒரு வரைபடம் வெளியிட்டுக் கொண்டார்.

நம்ம மன்மோகன்சிங் பெரியப்பா இருக்கும் வரை, பெரிதாக ஒன்னும் அலட்டிக்கல. அப்பப்ப லைட்டா முனங்குவார், நாட்டாமையிடம் கம்ப்ளைன் பண்ணிப் புலம்புவார். சீனா அண்ணாச்சி நாட்டாமையை பெருசா எப்பவும் மதிப்பதில்லை. காஷ்மிர் மேப் மாதிரியே நம்ம அருணாச்சல பிரதேசத்தையும், அது திபெத்தின் தெற்குப் பிராந்தியம் என்று மேப்பினை வரைஞ்சு வச்சுக்கிட்டு சுத்திட்டு இருந்தார்.

மன்மோகன் பெரியப்பாவுக்குப் பிறகு இந்திய நிர்வாகத்திற்கு வந்த மோடி பாபா, ஆரம்பத்திலிருந்தே அண்ணாச்சியை ச்சீ…. போ என்று உதாசீனப்படுத்தியும் அண்ணாச்சி எப்பவாவது உறுமினாரென்றால் ஒதுங்கிப் போகாமல் திரும்பி எதிரில் நின்று பிச்சுப்புடுவேன் பிச்சு என்பது போல முறைத்தும் வந்ததால், சீனா அண்ணாச்சி கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

இருந்தாலும் சும்மா இருக்க முடியாமல், பூட்டான் தம்பி வீட்டுப் பக்கம் டோக்லாமாவில் கொஞ்சம் உரசிப் பார்த்தார். மன்மோகன் பெரியப்பா மாதிரி இல்லாமல், மோடி பாபா நம்ம வீட்டு விடலைகளை டோக்லாமுக்கு அனுப்பி, மவனே ஒழுங்கா திரும்பிப் போறியா இல்ல என் பசங்களை உன் வீட்டுக்குள்ள அனுப்பட்டுமா என்ற ரீதியில் ஒரு மிரட்டு மிரட்டினார்.

சீனா அண்ணாச்சியின் ஒரிஜினல் தொடை நடுக்கம், திரும்ப வந்திடுச்சு. ஐய்யா… பில்டிங் மட்டும் தான் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு ரொம்ப வீக்குனு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.

மோடி பாபாவிடம் பகைச்சுக்கிறது எந்த வகையிலும் சரியில்லை. அப்புறம் நாம ரௌடினு ஃபார்ம் ஆனது வீணாப் போயிடும்னு,  “தம்ம்பி…. நான் இவ்வளவு நாளும் பேசிட்டிருந்ததை நீங்க சீரியஸா நினைச்சுட்டீங்க… ச்சும்மா உலுலாய்க்கு” என்று சொல்லிக் கொண்டதோடு, காஷ்மிர் மற்றும் அருணாச்சலபிரதேசத்தை இந்தியாவின் அங்கம்னு ஒரு அழுத்தமான வரைபடத்தை வரைந்து, வெள்ளைக் கொடியை ஆட்டிக்கிட்டே பல்லிளிச்சுக்கிட்டு நிக்கிறார்.

அந்த ஐம்பத்தாறு இஞ்ச்-ஐத் தாண்டி, இந்தியாவுக்குள் ஒன்னியும் கிழிக்கமுடியாது என்று சீனாக்கார அண்ணாச்சிக்குத் தெரியுது. நம்ம ஊரு சில்வண்டுகளுக்கு இன்னும் புரியல! 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP