பாகிஸ்தானை கைவிட்ட சீனா ; அதிர்ச்சியில் இம்ரான் கான்

சமாதான பேச்சு வார்த்தை முலம், இந்தியாவுடனான ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை விரைவில் தீர்த்துக் கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், சீன அதிபர் ஜீ ஜின்பிங் கூறியுள்ளார்.
 | 

பாகிஸ்தானை கைவிட்ட சீனா ; அதிர்ச்சியில் இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் சமாதான பேச்சு நடத்தும்படி, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை வழங்கியுள்ளது. சர்வதேச அரசியலில், இது பாக்கிஸ்தானுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கலாக பார்க்கப்படுகிறது. 

சீனாவின், பீஜிங் நகருக்கு, மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், "காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது மனிதர்கள் தலையிடுவதை விட, நீங்களாகவே இந்தியாவிடம் இது குறித்து கலந்துரையாடி, விரைவில் தீர்வு காண்பது நல்லது" என சீன அதிபர் ஜீ ஜின்பிங் கூறியுள்ளார். 

பாகிஸ்தானை கைவிட்ட சீனா ; அதிர்ச்சியில் இம்ரான் கான்

சீனா அதிபர் ஜீ ஜின்பிங், இந்தியாவிற்கு  வருகை தரும் நேரத்தில், சீனாவின் இந்த அறிவிப்பு, சர்வதேச அரசியலில், மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், சீனா தனக்கு ஆதரவளிக்கும் என்று நம்பியிருந்த பாகிஸ்தானுக்கு, ஜீ ஜின்பிங்கின் இந்த கருத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பரூதீன், காஷ்மீர் விவகாரத்தினால், சீனா எந்த வகையிலும் பாதிக்கப்படாது என சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற வுஹான் மாநாட்டை தொடர்ந்து, இந்தியா சீனா இரு நாடுகளும் நட்புறவோடு இருந்து வருவதாகவும், பல வர்த்தக ரீதியான ஒப்புதல்களில் கையெழுத்திட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் செங் ஷீ வாங் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டத்தொடரில் மத்திய அரசு, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியப் பிரதேசங்களாக பிரித்து புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அக்டோபர் 31 ஆம் தேதி அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP