சேட்டை நாயகர்கள்! சுவாரஸ்ய வைரல் வீடியோக்கள்

சில விலங்குகள் மனிதர்களுடன் ஐக்கியமாகி சில சேட்டைகளை செய்கின்றன. பார்ப்பது மிகவும் சுவரஸ்யாக இருக்கும் இந்த சேட்டைகளின் குட்டி தொகுப்பு
 | 

சேட்டை நாயகர்கள்! சுவாரஸ்ய வைரல் வீடியோக்கள்

 பெண் சிங்களுக்கு கால்பந்துப் போட்டி  

உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் தொடங்கி இருக்கும் நிலையில் லண்டனில் பெண் சிங்கங்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது.

லண்டன் வனவிலங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருபவை ஹெய்டி, இண்டி, ரூபி ஆகிய மூன்று பெண் சிங்கங்கள். அவற்றுக்கு விளையாட பந்து அளிக்கப்பட்டது. முதலில் அது உணவு பொருளாக இருக்குமோ என சிங்கங்கள் நுகர்ந்து பார்த்தன. பின்னர் பந்தை உருட்டி விளையாடின. மூன்று பெண் சிங்கங்களுக்கும் நடுவரா‌க ஒரு ஆண் சிங்கமும் களத்தில் இறக்கப்பட்டது.

பென்குயின்களின் பந்தாட்டம்

ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் உற்சாகமாக தொடங்கியுள்ள நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. 

மனிதர்கள் கால்பந்து விளையாடுவதை ரசித்து வந்த நமது கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது பென்குயின்களின் கால்பந்து போட்டி. இங்கிலாந்தின் Birmingham தேசிய கடல்வாழ் உயிரின பாதுகாப்பு மையத்தில் பராமரிக்கபப்ட்டு வரும் பென்குயின்கள் உற்சாகமாக வாயால் பந்தை தள்ளி விளையாடின. இதனை வீடியோவாக பதிவிட்டு Birmingham தேசிய கடல்வாழ் உயிரின பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.

சாப்பாடே தரமாற்றங்க! பார்வையாளர்களிடம் புலம்பிய கொரில்லா

அமெரிக்காவில் மனித குரங்கு ஒன்று தனக்கு உணவு வழங்கவில்லை எனக்கூறி பார்வையாளர்களிடம் முறையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.கை சைகை காட்டியுள்ளது.

இதையடுத்து பார்வையாளர்கள் கொரில்லாவிற்கு சில உணவு பொருட்களை வழங்கியுள்ளனர். அதை வாங்கிக்கொண்டும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பதுக்கி வைத்துக்கொள்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவனுடன் குதித்து விளையாடிய கரடி

அமெரிக்காவில் வனவிலங்குகள் பூங்காவில் கரடி ஒன்று சிறுவனுடன் விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

NASHVILLE பகுதியில் உள்ள வனவிலங்குகள் பூங்காவிற்கு பேட்ரிக் பார்க்கர் என்பவர் தனது 5 வயது மகனை அழைத்து சென்றார். அப்போது கரடி ஒன்றை கண்டதும் சிறுவன் உற்சாகத்தில் குதிக்க, கண்ணாடிக்கு மறுபுறம் இருந்து அதை கண்ட கரடி சிறுவனை நோக்கி வருகிறது. தொடர்ந்து சிறுவன் உற்சாக மிகுதியில் குதிக்க, கரடியும் அவனோடு குதித்து விளையாடுகிறது. பேட்ரிக் பார்கர் இதனை பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ஆயிரக்கணக்கானவர்கள் இந்த வீடியோவை லைக் செய்து ஷேர் செய்துள்ளனர்.

சாலையில் வாத்து குடும்பத்தின் அணிவகுப்பு

ஸ்காட்லாந்தில், பிஸியான சாலையை வாத்து குடும்பம் ஒன்று சாவகாசமாக கடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. 

காலை வேளையில் அதிகளவில் வாகன போக்குவரத்து காணப்படும் சாலையில் திடீரென வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதற்கு காரணம் இந்த வாத்து குடும்பம். இவை சாலையை கடந்து செல்லும் வரை கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு வாகனங்களை இயக்காமல் வாகன ஓட்டிகள் பொறுமையாக காத்திருந்தனர். வழக்கம் போல வாத்துக்களின் இந்த அணிவகுப்பை யாரும் செல்போனில் படம்பிடிக்கவும் தவறவில்லை.

கிச்சு கிச்சு மூட்ட சொல்லி விளையாடிய டால்பின்

கடலுக்கு அடியில் நீச்சலடித்த நீச்சல் வீரர்களுடன் கிச்சு கிச்சு மூட்டி விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.

எகிப்தில் செங்கடல் பகுதியில் நீந்திக்கொண்டிருந்த நீச்சல் வீரர்களுக்கு அருகில் வந்த டால்பின் அவர்களுடன் விளையாட தொடங்கியது. உடனே வீரர்கள் டால்பினுக்கு கிச்சு கிச்சு மூட்டி விளையாட தொடங்கின. அதனை ரசித்த டால்பின் மீண்டும் அதுபோன்றி கிச்சு கிச்சு மூட்ட சொல்லி வயிற்றுப்பகுதியை காட்டியது. உடனே கிச்சு கிச்சு மூட்டி வீரர்களும் விளையாடின. இதனை வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP