ஜமால் கஷோகி கொலையில் தொடர்புடைய அதிகாரிகளின் விசாக்கள் ரத்து: அமெரிக்கா அதிரடி முடிவு

சவுதி அரேபிய அரசை விமர்சித்து கட்டுரை எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில் தொடர்புடைய சவுதி அரேபிய அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்ய இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியா தெரிவித்துள்ளார்.
 | 

ஜமால் கஷோகி கொலையில் தொடர்புடைய அதிகாரிகளின் விசாக்கள் ரத்து: அமெரிக்கா அதிரடி முடிவு

சவுதி அரேபிய அரசை விமர்சித்து கட்டுரை எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில் தொடர்புடைய சவுதி அரேபிய அதிகாரிகளின் விசாக்களை ரத்து செய்ய இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியா தெரிவித்துள்ளார். 

வாஷிங்டன் போஸ்ட் பத்தரிகையில் கட்டுரையாளராக இருந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர்க ஜமால் கஷோகி கடந்த 2ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு சென்றார். அங்கிருந்து அவர் திரும்பிவில்லை.

சவுதி அரச குடும்பத்திற்கு எதிராக எழுதி வந்த கஷோகியை, அங்கு வரவழைத்து சவுதி அதிகாரிகள் கொலை செய்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து துருக்கி அரசு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன. சவுதியில் இருந்து 15 பேர் துருக்கி வந்ததகாவும், கஷோகியை தூதரகத்தில் வைத்தே கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அமிலத்தில் கரைத்ததாகவும் கூறப்பட்டது. 

சர்வதேச அளவில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து, 17 நாட்களுக்கு பிறகு கஷோகி கொலை செய்யப்பட்டு விட்டதாக சவுதி அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் அவரது உடல் பற்றி எதுவுமே கூறவில்லை. இதைத் தொடர்ந்து, கஷோகியை சவுதி அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

துருக்கி எதிர்க்கட்சித் தலைவர் டோகு பெரின்செக், துண்டு துண்டாக வெட்டப்பட்ட கஷோகியின் உடல் பாகங்கள், துருக்கி தூதரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லாத நிலையில், லண்டனை சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனமும், கஷோகியின் உடல் பாகங்கள் தூதரின் வீட்டில் கிடப்பதாக தெரிவித்துள்ளது. சவுதி அரசுக்கு இது மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடைய சவூதி நாட்டவர்களின் விசாவை ரத்து செய்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது முதல்கட்ட நடவடிக்கை தான் என்று தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியா, ஜமாலின் கொலையை ஒரு போது அமெரிக்கா ஏற்காது என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP