கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 50 பேர் பலி

கென்யத் தலைநகர் நைரோபியில் இருந்து கிசுமு ((Kisumu)) என்ற நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சரிவில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பலியாகினர்.
 | 

கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 50 பேர் பலி

கென்யாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். 

கென்யத் தலைநகர் நைரோபியில் இருந்து கிசுமு ((Kisumu)) என்ற நகருக்குச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து ஒரு சரிவில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் 50 பேர் பலியாகியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினரும் போலீசாரும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விபத்து நேர்ந்த இடத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும், இதுவரை அதற்கு தீர்வுகாணும் வகையில், கென்ய நெடுஞ்சாலைத்துறை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP