பஞ்சாப் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே!

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது நடத்தப்பட்ட, ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்திற்கு, பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
 | 

பஞ்சாப் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே!

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது நடத்தப்பட்ட, ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்திற்கு, பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது, 1919ம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ஜாலியன்வாலா பாக்கில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குறி்ப்பாக சீக்கியர்கள் மீது, ஆங்கிலேயப் படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 

இதில், 400க்கும் மேற்பட்டோர் கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ஆங்கிலேய அரசு அறிவித்தது. ஆயினும், இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானதாக, இந்திய தரப்பில் கூறப்பட்டது. 

இந்த படுகொலை சம்பவத்தின் நினைவாக, ஜாலியன்வாலா பாக்கில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு இந்தியா வந்திருந்த, அப்போதைய பிரதமர் டேவிட் கேமருன், இந்த சம்பவம் வெட்கப்படக் கூடியது என்றாரே தவிர, இதற்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 

இந்நிலையில், ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவம் நிகழந்து, 100 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், பிரிட்டன் பார்லிமென்ட்டில் பேசிய, அந்நாட்டு பிரதமர் தெரசா மே, இச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தம்  தெரிவித்துள்ளார். அவரும், மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP