பிரிட்டன் இளவரசர் ஹேரியின் மனைவி கருவுற்றார்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவியும் நடிகையுமான மேகன் மார்க்கல் கர்பமடைந்து இருப்பதாக கென்சிங்ஸ்டன் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது இவர்கள் இருவரும் சிட்னிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
 | 

பிரிட்டன் இளவரசர் ஹேரியின் மனைவி கருவுற்றார்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவியும் நடிகையுமான மேகன் மார்க்கல் கர்பமடைந்து இருப்பதாக  கென்சிங்ஸ்டன் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டிவி நடிகை மேகன் மார்க்கலுக்கும் கடந்த மே மாதம் லண்டனில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன் ஆகியோர் எங்கு சென்றாலும் அதுகுறித்த செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவிவிடும். அதையெல்லாம் பின் தொடர தனி ரசிகர்களே இருக்கிறார்கள் எனலாம். அந்த வகையில் மேகன் கர்பமடைந்து இருக்கிறார் என்ற தகவல் பரவி வந்தது. 

அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கென்சிங்ஸ்டன் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹாரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோரின் திருமணம் நடந்தது முதல் மக்கள் அளித்து வரும் ஆதரவை நினைத்து மகிழ்ச்சி அடைந்தோம். இந்த நல்ல செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP