இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: பதற்றம் நீடிப்பு

இலங்கையின் இன்று மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததால் அந்நாட்டில் பதற்றம் நீடிக்கிறது.
 | 

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு: பதற்றம் நீடிப்பு

இலங்கையின் நேற்று மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இலங்கையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், ஒரு வீட்டில் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்நாட்டு போலீசார் நேற்று அங்கு சாேதனை நடத்திய போது, வீட்டிற்குள் பதுங்கியிருந்த சிலர், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டும், தற்கொலை படையாக மாறி வெடி பொருட்களை வெடிக்கச் செய்தும் தாக்குதல் நடத்தினர்.

இதில், 4 பெண்கள் உட்பட, 15 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தாக்குதல் நடந்த, சாய்ந்த மருது மற்றும் கல்முனை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று  குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP