அனைத்து சர்ச்சைக்குரிய 737 MAX விமானங்களையும் முடக்கியது போயிங்

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தை தொடர்ந்து, போயிங் 737 MAX பயணிகள் விமானங்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, பயன்பாட்டில் இருக்கும் 371 போயிங் 737 MAX விமானங்களையும் முடக்கியுள்ளது அந்நிறுவனம்.
 | 

அனைத்து சர்ச்சைக்குரிய 737 MAX விமானங்களையும் முடக்கியது போயிங்

எத்தியோப்பியன்  ஏர்லைன்ஸ் விமான விபத்தினால், போயிங் 737 MAX பயணிகள் விமானங்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து, பயன்பாட்டில் இருக்கும் 371 போயிங் 737 MAX விமானங்களையும் முடக்கியுள்ளது அந்நிறுவனம்.

சமீபத்தில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, ஆடிஸ் அபாபாவின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தும், இந்தோனேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமான விபத்துக்கும் ஒன்று போல நடைபெற்றதனால், அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இரண்டு விபத்திலுமே, பிரபலமான போயிங் 737 MAX 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதால், விமானத்தின் கோளாறு காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 

இதைத் தொடர்ந்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக போயிங் 737 MAX 8 மற்றும் 9 விமானம் பறக்க தடை  விதித்தன. இதைத் தொடர்ந்து அமெரிக்க பயணிகள் விமானத்துறை பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவிலும் அந்த நிறுவனத்தின் விமானங்கள் பறக்க தடை விதித்தது. 

இந்த விபத்துக்களுக்கு தங்களது விமானத்தின் கோளாறு காரணமில்லை என்று கூறி வந்த போயிங் நிறுவனம், தற்போது உலகம் முழுக்க செயல்பாட்டில் உள்ள அனைத்து 737 MAX விமானங்களும் பறக்க தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது. இது பாதுகாப்பு காரணமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தான் என்று கூறியுள்ள போயிங் நிறுவனம், மேலும் விரைவில் நடைபெற உள்ள ஆய்வின் மூலம், விபத்துக்கு விமான கோளாறு காரணமில்லை என்று தெரிய வரும் என்று தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP