கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்ட போயிங் விமானம்!

போகும் போக்கை பார்த்தால், போயிங் ரக விமானங்கள், வாஷிங்டன் நகர சாலையை ஆக்கிரமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, அந்நகரவாசிகள் கிண்டலாக விமர்சித்துள்ளனர்.
 | 

கார் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்ட போயிங் விமானம்!

அமெரிக்க தயாரிப்பில் உருவான போயிங் ரக விமானங்கள், அடிக்கடி விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்த விமானப் பயன்படாட்டிற்கு இந்தியா உட்பல பல நாடுகள் தடை விதித்துள்ளன. இதையடுத்து, அதில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய அந்த நிறுவனம் போயிங் 737 ரக விமானங்களை அதன் உற்பத்தி தொழிற்சாலையில் நிறுத்தி வைத்துள்ளது. 

பல்வேறு நாடுகளில் இருந்தும் போயிங் ரக விமானங்கள் தொடர்ந்து, வாஷிங்டன் நோக்கி வந்து கொண்டிருப்பதால், விமானங்களை நிறுத்த இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, நிறுவன ஊழியர்கள் தங்கள் கார்களை நிறுத்தும் பகுதியில் போயிங் ரக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு இறுதியில், போயிங் ரகத்தை சேர்ந்த எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளானதில், 157 பேர் பலியாகினர். இதையடுத்து, அந்த வகை விமானங்களை பயன்படுத்த பல நாடுகளும் மறுப்பு தெரிவித்துள்ளன. இதனால், தங்கள் தயாரிப்பில் உள்ள குறைபாட்டை நீக்கி, புதிய ரக விமானமாக மாற்றித் தருவதுடன், அது குறித்து விமானிகளுக்கும் பயிற்சி அளிக்கும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

போகும் போக்கை பார்த்தால், போயிங் ரக விமானங்கள், வாஷிங்டன் நகர சாலையை ஆக்கிரமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என, அந்நகரவாசிகள் கிண்டலாக விமர்சித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP