'சிறப்பாக நடந்தது': வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின் டிரம்ப்

வரலாற்று சிறப்புமிக்க வடகொரிய அதிபருடனான சந்திப்பு சிறப்பாக நடந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
 | 

'சிறப்பாக நடந்தது': வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின் டிரம்ப்

வரலாற்று சிறப்புமிக்க வடகொரிய அதிபருடனான சந்திப்பு சிறப்பாக நடந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி இந்த சந்திப்பின் போது பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நடந்தது. 

சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர். இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்தது என தெரிவித்தார். 

இந்த சந்திப்பினால் கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதி ஏற்படும் என்று உலக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் அதிபர்  லீ ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்ட டிரம்ப் இன்று இரவு 7 மணக்கு அமெரிக்கா திருப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP