வங்கிக் கொள்ளை: 12 பேர் சுட்டுக் கொலை

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் மிலகிரீஸ் நகரில், இரு வங்கிகளில் நடைபெற்ற கொள்ளை முயற்சியின்போது போலீஸாருக்கும், கொள்ளை கும்பலுக்கு இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
 | 

வங்கிக் கொள்ளை: 12 பேர் சுட்டுக் கொலை

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் மிலகிரீஸ் நகரில், இரு வங்கிகளில் நடைபெற்ற கொள்ளை முயற்சியின்போது போலீஸாருக்கும், கொள்ளை  கும்பலுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

மிலகிரீஸ் நகரில்  உள்ள இரு தனியார் வங்கிகளில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொள்ளை கும்பல் ஒன்று இரு குழுக்களாக பிரிந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது. வங்கி வாடிக்கையாளர்கள் சிலரையும் அக்கும்பல் பணைய கைதிகளாக பிடித்து வைத்திருந்தது.

தகலறிந்து அங்கு விரைந்த போலீஸாருக்கும், கொள்ளையருக்கும் இடையே சுமார் 20 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், கொள்ளையர்கள் 6 பேர், ஒரு குழந்தை உள்பட 12 பேர்  உயிரிழந்தனர்.

கொள்ளையர்களின் முயற்சி வெற்றி பெறவில்லையென்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மிலகிரீஸ் நகர் போலீஸார்  தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP