ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்புகிறது வங்கதேசம்

மியான்மரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்நாட்டுப் போர் நடந்தபோது, 7.23 லட்சம் ரோஹிங்கியாக்கள், நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இன்று முதல் படிப்படியாக நாடு திரும்பவுள்ளனர்.
 | 

ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்புகிறது வங்கதேசம்

வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்த ரோஹிங்கியா இன முஸ்லிம்களை, அவர்களது சொந்த நாடான மியான்மருக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மியான்மரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்நாட்டுப் போர் நடந்தபோது, 7.23 லட்சம் ரோஹிங்கியாக்கள், நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை படிப்படியாக தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து வங்கதேசம் - மியான்மர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், ரோஹிங்கயாக்களை உடனடியாக திருப்பி அனுப்புவது என்பது அவர்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்தனர். குறிப்பாக, வங்கதேச அரசின் முடிவுக்கு ஐ.நா. அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இருப்பினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, ரோஹிங்கயா அகதிகளில் முதலாவது குழுவினரை இன்று மியான்மருக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை வங்கதேசம் மேற்கொண்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக, வங்கதேச மறுவாழ்வு, மீள்குடியேற்ற ஆணையர் அப்துல் கலாம் தெரிவித்தார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP