பாக் தரம் தாழ்ந்து செயல்படுகிறது: நாம் உயரப் பறந்து கொண்டிருக்கிறோம்: சையது அக்பரூதீன்

ஐக்கிய நாட்டு கூட்டத்தின், இந்தியாவின் நிரந்தர தூதரான சையது அக்பரூதீன், "பாகிஸ்தான் தரம் தாழ்ந்து செயல்படுகிறது; அதன் இந்த செயல்பாடு இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது. நாம் உயரப் பறந்துகொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
 | 

வரும் செப் 27., ஆம் தேதி நடக்கவுள்ள ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தைக் குறித்து பேச உள்ளதாக வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியதையடுத்து, இந்தியாவின் நிரந்தர தூதரான  சையது அக்பரூதீன் அதற்கு பதில் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழனன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், "உலக நாடுகளின் மத்தியில் நம்மை குற்றவாளியாக காட்டும் முயற்சியில் பாகிஸ்தான்  ஈடுபட்டுள்ளது. ஒரு பிரச்சனையை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் அதன் தீர்வும் அமையும். 

பாகிஸ்தானின் தீவிரவாத மிரட்டலுக்கே செவி சாய்க்காத நம்மை, அதன் வெறுக்கத்தக்க பேச்சுகள் எந்த வகையிலும் பாதிக்க போவதில்லை. உலக நாடுகளின் முன்னிலையில் இந்தியாவை ஒரு போதும் பாகிஸ்தானால் குற்றவாளியாக காண்பிக்க இயலாது. பாகிஸ்தான் தரம் தாழ்ந்து செயல்படுகிறது; அதன் இந்த செயல்பாடு இந்தியாவை எந்த வகையிலும் பாதிக்காது. நாம் உயரப் பறந்து கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றதில் இருந்தே, இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீர் பிரச்சனையில் தலையிட வேண்டாம் என பல முறை இந்தியா எச்சரிக்கை விடுத்தும், பாகிஸ்தான் அதை பற்றி ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில் பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP