பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் 'பொதுமன்னிப்பு' கேட்ட ஆஸ்திரேலிய அரசு!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்ட்டன் ஆகியோர் சேர்ந்து, அந்நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற ஆயிரக்கணக்கான பாலியல் வன்முறை சம்பவங்களுக்காக பொதுமன்னிப்பு கேட்டனர்.
 | 

அரசு நடத்தும் விடுதிகளிலும், மதரீதியாக நடத்தப்படும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களிலும், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அந்நாட்டில் உள்ள பல தேவாலயங்களில் உள்ள பாதிரியார்கள்,குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 8000க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் அநேக குற்றச்சாட்டுகள், அரசு மற்றும் மத ரீதியாக நடத்தப்படும் விடுதிகள் மற்றும் காப்பகங்களில் நடந்தவையாகும். இந்நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். "ஒரு தேசமாக இன்று நாம் செய்த தவறுகளை திரும்பி பார்க்க வேண்டிய இடத்தில் உள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதை கேட்கவில்லை, அவர்களை நம்பவில்லை, அவர்களுக்கு நியாயம் கிடைக்க உதவவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம்" என்றார். 

நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த பாதிக்கப்பட்டவர்களிடம், "உங்களை நாங்கள் நம்புகிறோம். இந்த தேசம் உங்களை நம்புகிறது" என உருக்கமாக பேசினார் பிரதமர் மாரிசன்.

இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்ட்டன், "தேசம் உங்களை கைவிட்டதற்காக இன்று நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். இன்று எங்களுக்குள் உள்ள இந்த நெருப்பு, வருங்காலத்தில் நம் குழந்தைகள் பாதுகாப்பான சமுதாயத்தில் வளர வழிவகை செய்யும்" என்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP