அமேசான் காட்டு தீ: ஜி7 நாடுகளின் உதவியை புறக்கணித்த பிரேசில்!

அமேசான் காட்டு தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவிக்கரம் நீட்டிய நிலையில், பிரேசில் அரசு உதவி தேவையில்லை என மறுத்துள்ளது.
 | 

அமேசான் காட்டு தீ: ஜி7 நாடுகளின் உதவியை புறக்கணித்த பிரேசில்!

அமேசான் காட்டு தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவிக்கரம் நீட்டிய நிலையில், பிரேசில் அரசு உதவி தேவையில்லை என மறுத்துள்ளது. 

அமேசான் காடானது பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி காணப்படுகிறது. பெரும்பான்மையான காடுகள் பிரசிலில் உள்ளது. இந்த அமேசான் காடுகள் மூலம் 30 சதவீதம் ஆக்ஸிஜன் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2  வாரங்களுக்கு முன்பு பிரேசிலில் உள்ள அமேசான் காட்டில் காட்டுத் தீ ஏற்பட்டது. தொடர்ந்து தீ பரவி வரும் நிலையில் தீயை அணைப்பதற்காக பிரேசில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

ராணுவ விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் எடுத்துசெல்லப்பட்டு அணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், ஜி7 நாடுகள் அமேசான் காட்டு தீயை அணைக்க ரூ. 160 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது. ஆனால் பிரேசில் அரசு நிதியுதவி தேவையில்லை மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP