சுவீடன்: ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து

சுவீடனில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் இருந்து விலகி ஓடியதால் கட்டிடத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
 | 

சுவீடன்: ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து

சுவீடனில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக 179 பயணிகள் உயிர் தப்பினர். 

சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 6 விமான பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் 5-வது டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்காக புறப்பட்ட போது, விமானம் ஓடுபாதையில் இருந்து சற்று விலகி ஓட ஆரம்பித்தது. இதனால் அருகில் இருந்த கட்டிடத்தில் விமானத்தின் இடது பக்க இறக்கை மோதி விமானம் குலுங்கியது. 

உடனடியாக விமானி அந்த விமானத்தை நிறுத்தியதால், விமானத்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். பயணிகள் அனைவரும் அவசர கதவு வழியே வெளியேற்றப்பட்டனர்.  இதையடுத்து சில மணி நேரத்திற்கு பின்னர் வேறு விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானம் தடம் மாறி சென்றதற்கு காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP