Logo

ஒயினுடன் ஒரு செஸ் போட்டி

சதுரங்க போட்டியில் கருப்பு காயின்ஸ் மற்றும் வெள்ளை காயின்ஸ் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜார்ஜியாவில் அந்த காயின்ஸ்களுக்கு பதிலாக ஒரு கப் ஒயின் வைத்து விளையாடிய விநோத நிகழ்வு நடைபெற்றுள்ளது.
 | 

ஒயினுடன் ஒரு செஸ் போட்டி

சதுரங்க போட்டியில் கருப்பு காயின்ஸ் மற்றும் வெள்ளை காயின்ஸ் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் ஜார்ஜியாவில் அந்த காயின்ஸ்களுக்கு பதிலாக ஒரு கப் ஒயின் வைத்து விளையாடிய விநோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. 

ஜார்ஜியாவின் செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை ஜார்ஜியாவின் கடற்கரை நகரமான பட்டூமியில் தொடங்கவுள்ள 43 ஆவது உலக சதுரங்கப் போட்டியை முன்னிட்டு வித்தியாசமான ஒயின் செஸ் போட்டி நடைபெற்றது. 

ஜார்ஜியாவின் தலைநகரான டிபிள்சியில் வெள்ளை மற்றும் சிவப்பு ஒயின்களை பிரபலப்படுத்தும் நோக்கில் ஒயின் நிறுவனம் ஒன்று இந்த போட்டியை நடத்தியுள்ளது. இப்போட்டியில் உலகின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டரும், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான நோனா காப்ரின்டாஷ்விலியும், முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான ஜூரப் அஸ்மைபராஷ்விலியும் பலப்பரீட்சை நடத்தினர்.

 வெள்ளை காயின்ஸ்களுக்கு பதில் ஒரு கப்பில் வெள்ளை ஒயினும், கருப்பு காயின்ஸ்களுக்கு பதில் சிவப்பு ஒயினும் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு காயின்ஸ்களையும் வெட்டும்போது அந்த கப்பில் உள்ள ஒயின்களை ஒரு சிப் குடித்துக்கொள்ளலாம். விநோதமாக நடைபெற்ற இந்த ஒயின் செஸ் போட்டியை பங்கேற்பாளர்கள் ஒயினை ருசித்ததுடன், ஏராளமானோர் கண்டு களித்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP