8 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் சிறுவன்

பெல்ஜியத்தில் 8 வயதிலேயே பள்ளி மேற்படிப்பை முடித்து சிறுவன் ஒருவன் தன்னுடைய அறிவாற்றலால் அனைவரையும் ஆச்சர்யமடைய வைத்திருக்கிறான்.
 | 

8 வயதிலேயே பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் சிறுவன்

பெல்ஜியத்தில் 8 வயதிலேயே உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி பெற்றுள்ள சிறுவன், தன்னுடைய அதீத அறிவாற்றலால் அனைவரையும் ஆச்சர்யமடைய வைத்திருக்கிறார். 

லாரெண்ட் சிம்மன்ஸ் என்ற சிறுவன் பெல்ஜியத்தின் ஆஸ்டென் நகரில் 2009ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த 8 வயது சிறுவன் 6 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பள்ளி மேற்படிப்பை ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளேயே முடித்திருக்கிறார். மற்ற மாணவர்களை விட 10 ஆண்டுகள் முன்னதாகவே பள்ளிப்படிப்பை முடித்துள்ளார் சிம்மன்ஸ். தனக்கு கணிதப்பாடமே மிகவும் பிடித்த பாடம் எனக் கூறும் இந்தச் சிறுவன் இன்னும் இரண்டு மாதங்களில் கல்லூரி படிப்பை தொடங்க இருக்கிறார். பொறியாளர் ஆக வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று லாரெண்ட் சிம்மன்ஸ் கூறியுள்ளார். லாரெண்ட் சிம்மன்ஸின் I.Q.எனப்படும் நுண்ணறிவுத் திறன் 145 என்கிறார்கள் இவனது பெற்றோர். சாதாரண மனிதனின் நுண்ணறிவு திறன் 90 இல் இருந்து 110ஆக இருக்கும். 130ஆக இருந்தால் அது வரம் எனக் கூறுவார்கள்.

முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷமிதா என்ற சிறுமி  4 வயதில் 10ம் வகுப்பை முடித்து, 16 வயதில் பொறியியல் பட்டம் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP