கிரீஸ் காட்டு தீயில் 74 பேர் பலி

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 24ஆக இருந்த நிலையில் இன்று 74 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 | 

கிரீஸ் காட்டு தீயில் 74 பேர் பலி

கிரீஸ் நாட்டின்  தலைநகரான  ஏதென்ஸில் நேற்று  ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக இருந்த நிலையில் இன்று  60ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,  ”கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் சுற்றுலா பகுதிகளில் திங்கட்கிழமை அன்று  காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் இளைஞர்களும் குழந்தைகளும் அடங்குவர் என்று தெரிவித்துள்ளது.

இந்த காட்டு தீ விபத்தில் சிக்கியோர் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக   கிரீஸ் அரசு அச்சத்தோடு  தெரிவித்தது. ஆயிரக்கணக்கான வீடுகளும் சுற்றுலா விடுதிகளும், அங்குள்ள வாகனங்களும் இந்த காட்டு தீக்கு இறையாகியுள்ளன. அதுமட்டும் இல்லாமல்  இந்த காட்டு தீ ஏற்பட்ட பகுதிகளிலுருந்து சுமார் 750க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர்.

"நாங்கள் காட்டுத் தீயை அணைக்க எல்லா வகையிலும் முயற்ச்சி செய்து  வருகிறோம். ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தண்ணீர் தொடர்ந்து தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து  மீட்புப் பணிகளும்  நடந்து வருகிறது” என்று கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார். இதுவே கிரீஸில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான காட்டு தீ என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP