இறந்த மானின் வயிற்றில் 7 கிலோ ப்ளாஸ்டிக் - அதிர்ச்சி தகவல் !!!

தாய்லாந்து : இறந்து போன மானின் வயிற்றில் 7 கிலோ ப்ளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட தகவல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 | 

இறந்த மானின் வயிற்றில் 7 கிலோ ப்ளாஸ்டிக் - அதிர்ச்சி தகவல் !!!

தாய்லாந்து : இறந்து போன மானின் வயிற்றில் 7 கிலோ ப்ளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட தகவல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ப்ளாஸ்டிக் பொருட்களை அதிகப்படியான அளவில் பயன்படுத்தும் நாடுகளில் முன்னிலை வகிக்கிறது தாய்லாந்து. ஓராண்டிற்கு 3,000 ப்ளாஸ்டிக் பைகளை உபயோகிக்கும் நாடான தாய்லாந்தில், ஓர் தேசிய பூங்காவில் இறந்த போன ஓர் மானின் வயிற்றில் 7 கிலோ ப்ளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நாம் அன்றாடம் உபயோகிக்கும் ப்ளாஸ்டிக் பைகளும், இன்ன பிற சாதனங்களும் நமக்கு பாதிப்பை அளிப்பதற்கு சிறிது காலம் எடுத்துக் கொண்டாலும், அதில் சம்பந்தப்படாத ஐந்தறிவு ஜீவன்களை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. 

இறந்த விலங்குகள் மற்றும் பறவைகளது வயிற்றில் ப்ளாஸ்டிக் கழிவுகள் கண்டுபிடிக்குப்படுவது இதுவே முதல் முறையும் இல்லை, கடைசி முறையாக இருக்க போவதும் இல்லை. இத்தகைய சம்பவங்களை நாம் அனைவரும் ஓர் செய்தியாக மட்டுமே கடந்து செல்கிறோம். 

ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நாம் அதன் பலனை அனுபவிப்பது சரி. ஆனால் ஐந்தறிவு ஜீவன்கள் ஏன் அனுபவிக்க வேண்டும்.

இத்தனை ஆண்டு காலங்களில் நாம் பயன்படுத்திய அனைத்தும் இந்த உலகின் கடைசி உயிர் வரை பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதுவரை நாம் இதன் நேரடி பாதிப்புகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும், இதில் எந்த சம்பந்தமும் இல்லாமல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஐந்தறிவு ஜீவன்களை நாம் நினைவில் கொண்டேனும் நமது ப்ளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP