நியூஸிலாந்தில் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு - 40 பேர் பலி

நியூலாந்தில் கிறிஸ்டுசர்ச் என்ற பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமைக்கான தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென உள்புகுந்த மர்ம நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 40 பேர் பலியாகினர்.
 | 

நியூஸிலாந்தில் மசூதிக்குள் துப்பாக்கிச்சூடு - 40 பேர் பலி

நியூலாந்தில் கிறிஸ்டுசர்ச் என்ற பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமைக்கான தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென உள்புகுந்த மர்ம நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 40 பேர் பலியாகினர். அந்நாட்டு அரசு இதை உறுதி செய்துள்ளது.

அப்பகுதியில் உள்ள மற்றொரு மசூதியிலும் இதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால், மொத்தம் எத்தனை நபர்கள் இதில் ஈடுபட்டார்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலில் தாக்குதல் நடத்திய நபர், தனது தலையில் பொருத்தப்பட்ட காமிராவில் பதிவான வீடியோவை சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாகத் தெரிகிறது. அந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

”துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து கிறிஸ்டுசர்ச் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலை எதிர்கொள்ள காவல்துறை தனது முழுத்திறனையும் பயன்படுத்தி வருகிறது’’ என்று நியூஸிலாந்து காவல்துறை கமிஷனர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து பிரதமர் ஜஸிந்தா ஆர்டன் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இது நாட்டின் கருப்பு தினங்களில் ஒன்றாகும் என்றார். தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 40-ஆக உள்ளது என்றும் அவர் கூறினார். முன்னதாக, தாக்குதல் நடைபெற்ற மசூதியில் வழிபாடு நடத்துவதற்காக செல்லவிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP