ஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் உயிரிழப்பு !

அதிகமாக பயணிகள் இருந்ததால் எதிர்பாராதவிதமாக அந்த படகு திடீரென ஆற்றில் மூழ்கி கவிழ்ந்தது. படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
 | 

ஈராக்கில் படகு கவிழ்ந்து 40 பேர் உயிரிழப்பு !

ஈராக்கில் நேற்று (வியாழக்கிழமை) புத்தாண்டு தினத்தை கொண்டாட படகில் சென்ற 40க்கும் மேற்பட்டோரில், 40 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்களது புத்தாண்டை நேற்று (வியாழக்கிழமை) கோலாகாலமாக கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற்பட்டோர் ஒரே படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றுள்ளனர். 

 
அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் எதிர்பாராதவிதமாக அந்த படகு திடீரென ஆற்றில் மூழ்கி கவிழ்ந்தது. படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP