Logo

மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் !!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் எச்சரிக்கையை தொடர்ந்து, மெக்சிகோவில் சட்டவிரோதமாக வசித்து வந்த 311 இந்தியர்களை, போயிங் 747 விமானம் மூலம் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது மெக்சிக்கோ அரசு.
 | 

மெக்சிசோவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயல்வதால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தது அமெரிக்க அரசு. இதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக குடியேரியிருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை  எடுக்கவில்லையெனில், மெக்சோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இவரின் இத்தகைய நிபந்தனையினால் அதிர்ச்சியடைந்த நிலையில், சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர்களை வெளியேற்றும் முயற்சியில் மிக மும்மரமாக ஈடுபட்டிருந்தத மெக்சிகோ அரசு, தற்போது, அங்கு சரியான அனுமதி இல்லாமல் வசித்து வந்த 30 இந்தியர்களை, போயிங் 747 விமானம் மூலம் இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP