ஒரே இரவில் பில்லியனர் ஆன 24வயது இளைஞர்!!

ஒரே இரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐ விட பில்லியனர் ஆகியுள்ளார் ஹாங்காங்கை சேர்ந்த மருந்து நிறுவன தலைவர்களான த்சே பிங் மற்றும் சியுங் விங்கின் மகன் எரிக் த்சே(24).
 | 

தங்களது 24 வயது மகனுக்கு பரிசளிக்க எண்ணிய ஹாங்காங் மருந்து நிறுவனத்தின் தலைவர்களான த்சே பிங் மற்றும்  சியுங் விங், 3.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை, தங்களது மகன் எரிக் த்சே பெயரக்கு மாற்றி எழுதியுள்ளனர்.

பில்லியனராக பிறந்த போதும், ஒரு சராசரி மனிதரை போலவே தனது 24 வயது வரை வளர்ந்த எரிக் த்சே, தனது பெற்றோர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயமாக காப்பாற்ற பாடுபடுவதாக உறுதியளித்துள்ளார்.

வெறும் 24 வயதே நிரம்பியுள்ள நிலையில், சினோ மருந்து நிறுவனத்தின் தலைவராக மட்டுமில்லாமல், ஹாங்காங்கை சேர்ந்த 5 நிறுவனங்களின் தலைவராகவும் உள்ளார் எரிக் த்சே.

ஃபோர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தயாரிப்பாளர் ஸ்டீஃபென் ஸ்பெல்பர்க் மற்றும் ஸ்டார்பக்ஸின் தலைவர் ஹோவர்ட் ஷால்ட்ஸ் ஆகிய மூவரையும் பின்னுக்குத்தள்ளி முன்னிலையில் உள்ளார்  எரிக் த்சே.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP