Logo

ஏமனில் பட்டினியால் வாடும் 10 லட்சம் குழந்தைகள்!

ஏமனில் உள்நாட்டுப்போர் காரணமாக சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் தவித்து வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 | 

ஏமனில் பட்டினியால் வாடும் 10 லட்சம் குழந்தைகள்!

ஏமனில் உள்நாட்டுப்போர் காரணமாக சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் தவித்து வருவதாக சேவ் தி சில்ட்ரன் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நீடித்து வருகிறது. தலைநகர் சனா உள்பட கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதிகளை மீட்பதற்காக சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ராணுவத்தினரும், ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக அந்நாட்டின் வான் எல்லை மற்றும் துறைமுகங்களை சவுதி அரேபியா மூடியுள்ளது. இதன்காரணமாக உணவு மற்றும் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத பசி, பட்டினி ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் உணவுக்கிடைக்காமல் பட்டினியாலும், குண்டு வெடிப்பு மற்றும் மற்ற நோய்களாலும் மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 
 
Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP