பிரேசிலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 10பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது
 | 

பிரேசிலில் மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையை அடுத்து மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

ரியோ டி ஜெனீரோ நகரத்தில் உள்ள மலை பகுதியில் அடிக்கடி மண் சரிவு நிகழ்வது தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை நிட்ரோய்  என்ற பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள 3 கிராமங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் அப்பகுதியில் இருந்த பெரும்பாலான வீடுகள் இடிபாடுகளில் சிக்கி மண்ணில் புதைந்தன. அந்த வீடுகளில் இருந்த 10 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான மேலும் 4 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். மேலும், மலைப்பாங்கான அந்த பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஏராளமான வீடுகள் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதிக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் மழை தொடர்ந்து பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP