ஆயுள் முழுக்கச் சீன அதிபராக இருக்கப் போகிறார் ஜி ஜின்பிங் - இன்று வாக்கெடுப்பு

சீனாவில் ஒருவர் இரண்டு முறை மட்டும்தான் அதிபராகப் பொறுப்பேற்க முடியும். தற்போது அந்தச் சட்டத்தைத் திருத்தி ஆயுள் முழுவதும் ஜி ஜின்பிங் அதிபராக இருப்பதற்கான வாக்கெடுப்பு சீன நாடாளுமன்றத்தில் இன்று நடக்கிறது. சீன கம்யூனிச கட்சி வசம்தான் ஆட்சி அதிகாரம் அனைத்தும் உள்ளது. இதனால், இந்த வாக்கெடுப்பு வெற்றிகரமாக முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

ஆயுள் முழுக்கச் சீன அதிபராக இருக்கப் போகிறார் ஜி ஜின்பிங் - இன்று வாக்கெடுப்பு

ஆயுள் முழுக்கச் சீன அதிபராக இருக்கப் போகிறார் ஜி ஜின்பிங் - இன்று வாக்கெடுப்புசீனாவில் ஒருவர் இரண்டு முறை மட்டும்தான் அதிபராகப் பொறுப்பேற்க முடியும். தற்போது அந்தச் சட்டத்தைத் திருத்தி ஆயுள் முழுவதும் ஜி ஜின்பிங் அதிபராக இருப்பதற்கான வாக்கெடுப்பு சீன நாடாளுமன்றத்தில் இன்று நடக்கிறது. சீன கம்யூனிச கட்சி வசம்தான் ஆட்சி அதிகாரம் அனைத்தும் உள்ளது. இதனால், இந்த வாக்கெடுப்பு வெற்றிகரமாக முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

சீனாவில் முன்பு ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபராக ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். சீன பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவர் 1970ம் ஆண்டு டங் சியோவுபிங் இதில் மாற்றம் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டார். இதன்விளைவாக, இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபராக இருக்கத் தடை விதிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் ஒருவரே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருப்பது தடை செய்யப்பட்டது. 

ஆனால், தற்போது அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங் தொடர்ந்து ஆட்சியில் இருக்க விரும்புகிறார். இதனால், சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உள்ளார். 2980 உறுப்பினர்கள் கொண்ட தேசிய மக்கள் காங்கிரஸில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தால் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும். இருப்பினும் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மேல் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, மேலும் 10 சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன. 

இன்றைய வாக்கெடுப்பைத் தொடர்ந்து சீன அதிபராக ஜி ஜின்பிங் ஆயுள் முழுக்க, அவர் விருப்பம்போலத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP